சாகித்திய அகாடமி விருது பெற்றமைக்காக, கவிஞர் புவியரசுவுக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழாவில், கலைஞானி கமல்ஹாசன் எழுதி வாசித்த கவிதை
...மனித வணக்கம்.
தாயே, என் தாயே!
நான்உரித்த தோலேஅறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண்.
தகப்பா, ஓ தகப்பா!
நீ, என்றோ உதறிய மைபடர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்! பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.
தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கேஅர்த்தங்கள் வெவ்வேறு.
தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடிப் போனாயோ?
மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக் குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சமங்கள் புரியும் வரை.
மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையேசெடியே,
மரமே, காடேமறு பிறப்பே
மரண செளகர்யமே, வாழ்!
மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல ..எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லைகாதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?
நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.
பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.
மதமென்றும், குலமென்றும்
நீ துவைத்த துணிக் கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.
வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத் தோன்றின்பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.
ஆம்,நான் உன் வரியில் நான் தெரிவேன்.
- கமல்ஹாசன்
G, myself specialised in media production consultation and psychology. I am very much interested in sharing my experiences which will motivate people. "Everybody has to be somebody.. I am the somebody" Have a nice day..
Monday, April 21, 2008
ஜி இன் வரி துளிகள்
முதல் வரி....
---------------
"இந்த பயணம் முடியும் வரை தான் உனக்கு ஒரு பேர் எனக்கு ஒரு பெயர்,
இந்த பயணம் முடிந்துவிட்டால் உனக்கும் எனக்கும் ஒரே பெயர் தான்....."
"கற்களை புரிந்து கொண்டவர்களுக்கு கடவுளை புரிந்து கொள்வது கடினம் தான்..."
---------------
"இந்த பயணம் முடியும் வரை தான் உனக்கு ஒரு பேர் எனக்கு ஒரு பெயர்,
இந்த பயணம் முடிந்துவிட்டால் உனக்கும் எனக்கும் ஒரே பெயர் தான்....."
"கற்களை புரிந்து கொண்டவர்களுக்கு கடவுளை புரிந்து கொள்வது கடினம் தான்..."
Subscribe to:
Posts (Atom)